பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் 5 ஹீரோக்களாக நடித்தவர்கள் சித்தார்த், பரத், நகுல், மணிகண்டன், தமன். இவர்களில் மணிகண்டன் தவிர மற்ற அனைவரும் பேசப்படும் நட்சத்திரங்களாக இன்று வளர்ந்து இருக்கிறார்கள். 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	சித்தார்த், ஜெனிலியா , பரத், நகுல் ஆகியோர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவிற்கும் நடித்து வருகிறார்கள்.  கடந்த 2003-ம் ஆண்டு வெளியான இப்படம் அன்றைய இளசுகளின் வட்டாரங்களில்  பெரிதாக பேசப்பட்டது.
 
									
										
			        							
								
																	
	 
	இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த பாய்ஸ் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இவர் தமிழ் படத்தின் அசிஸ்டென்ட் டைரெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் , இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சித்தார்த்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் "பாய்ஸ் 2" என குறிப்பிட்டுள்ளார்.