Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜி.வி பிரகாஷுடன் காதலா..? பிக் பாஸ் பிரபலத்தின் அடுத்த டார்கெட் !

ஜி.வி பிரகாஷுடன் காதலா..? பிக் பாஸ் பிரபலத்தின் அடுத்த டார்கெட் !
, திங்கள், 21 ஜனவரி 2019 (14:27 IST)
ஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா நடிக்கும் புது படத்திற்கான பூஜை இனிதே தொடங்கியது.


 
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் சர்வம் தாள மயம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
 
அதனை தொடர்ந்து, 100% காதல், ஐங்கரன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. மேலும் வாட்ச்மேன், அடங்காதே, ஜெயில், குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் ஜி.வி. நடித்து முடித்திருக்கிறார். 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, ரெட்டை கொம்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
 
இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் , ரைசா வில்சன் ஆகியோர் சேர்ந்து நடிக்கும் இப்படம் ஃபேன்டசி காமெடி கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம்.  இந்த படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இப்படத்தில் ஜோக்கர் படம் புகழ் குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்க  , இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் புகழ் ஷா, கலக்கப் போவது யாரு புகழ் ராமர், ஆனந்த் ராஜ் என  பல காமெடி நடிகர்கள் சேர்ந்த இப்படம் கலக்கபோகிறது . மேலும் நடிகர் செந்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

webdunia

 
இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது,  படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹேப்பி பர்த்டே சந்தானம்..!