டைமிங் காமெடி, த்ரில் கிளப்பும் மாமோ பேய்! தில்லுக்கு துட்டு 2 டிரெய்லர் ரிலீஸ்

திங்கள், 29 அக்டோபர் 2018 (19:55 IST)
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு படம் ரசிகர்களிம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாகத்தை சந்தானமே தயாரித்துள்ளார். 
 
இதில் சந்தானம், ஷ்ரத்தா சிவதாஸ், மொட்டை ராஜேந்திரன், பிபின் மற்றும் ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். ஷபீர் இசையமைத்துள்ளார். தற்போது தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
 
மாமோ பேய்க்கு பூஜை செய்வதில் தொடங்குகிறது டிரெய்லர். டைமிங் காமெடி அடிக்கிறார் சந்தானம். பேய் ஓட்டும் சாமியார்கள், பேய்களோடு சேர்ந்து பயமுறுத்துகிறார்கள். நகைச்சுவையுடன் பேய்கதையை திறம்பட இயக்கி வெற்றி கண்ட ராம்பாலா இந்த படத்திலும் சூப்பராக பேய்களை வைத்து விளையாட்டு காட்டியிருப்பது டீசரில் நன்றாகவே தெரிகிறது. 
 
வழக்கம் போல் வச்சு செய்யப்போகும் பேய்களும், கடைசி நேரத்தில் கடவுளின் அருளால் காப்பற்றப்பட போகும் சந்தானமும், செய்யும் லூட்டிகள்தான் படத்தின் கதை. திரைக்கதை எப்படி இருக்கும் என்பதற்கு இன்று வெளியான டிரெய்லரரே ஒரு சாட்சி. தற்போது  'தில்லுக்கு துட்டு 2' யூடியூப்பில் வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அறிவியல் திருடன் எந்திரன் '2.0 ' ! காண காத்திருப்போருக்கு சூப்பர் ட்ரீட்