தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பிடித்தமான மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சித்தார்த். இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் இளம் நடிகராக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை அடைந்தவர் நடிகர் சித்தார்த்.
தமிழ் சினிமாவில் ஒரு சாக்லேட் பாயாக அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மன திருப்தியாக இவ்வருடம் முடிகிறது, அடுத்த வருடம் முழுவதும் பட ரிலீஸ் இருக்கிறது.
கடந்த இரண்டு மாதமாக தோள்பட்டை அறுவை சிகிச்சை, படப்பிடிப்புகள், வைரஸ் தொற்று இதையெல்லாம் பார்த்துவிட்டேன், 2018 போதும், அடுத்த வருடம் பார்ப்போம் என்று டுவிட் செய்துள்ளார்.
இது சித்தார்த் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தற்போது நடிகர் சித்தார்த் உடல் நலம் தேறி வந்து படங்களில் வழக்கம் போல நடித்து வருகிறார்.தற்போது தமிழில் சைத்தான் கி பச்சா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.