தென்னிந்தியர்களை லுங்கியை அவிழ்த்து ஓடவிடனும் என்று ஆக்ரோஷமாக பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் ரஜினியின் பேட்ட பட வில்லன் நவாஸுதீன் சித்திக்.
இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷாவும், சிம்ரனும் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசி குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் வில்லனாக நடிகர் நவாசுதீன் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் இந்தியில் வெளியாகியுள்ள ‘தாக்ரேய ‘ என்ற திரைப்படத்தில் நவாஸுதீன், தென்னிந்தியர்களை பற்றி தவறாக பேசிய வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த படத்தில் அதில் ஒரு காட்சியில் மேடையில் பேசும் தாக்கரே,‘தென்னிந்தியர்கள் நமது அனைத்துவேலை வாய்ப்புகளையும் சுரண்டிக் கொண்டனர். அவர்களின் லுங்கியை அவிழ்த்து, விரட்டியடிப்போம்’ என கடுமையான வார்த்தைகள் சொல்லப்பட்டுள்ளது.
இந்த வசனம் தென்னிந்திய மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல நடிகர் சித்தார்த்தும் தற்போது ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.