Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

Advertiesment
பிக் பாஸ் தமிழ் 9

Mahendran

, திங்கள், 24 நவம்பர் 2025 (16:29 IST)
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஏழாவது வாரத்தை கடந்துள்ள நிலையில், மொத்தம் 20 போட்டியாளர்களில் இதுவரை 9 பேர் வெளியேறி உள்ளனர். நேற்று  கெமி வெளியேறிய நிலையில், தற்போது பிக் பாஸ் இல்லத்தில் உணவு பிரச்சனை காரணமாக போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
இன்றிஅய ப்ரோமோவில், வியானா மற்றும் திவ்யா கணேஷ் இருவரும் உணவு கட்டுப்பாடு குறித்து பேசும்போது வார்த்தை போரில் ஈடுபடுகின்றனர். சமையல் குழுவில் உள்ள திவ்யா கணேஷை வியானா நேரடியாக குற்றம் சாட்டினார்.
 
"மூன்று தோசைதான் கொடுப்போம், இரண்டு தோசைதான் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். அப்படியானால் எதற்கு இவ்வளவு மளிகை பொருட்கள் வருகிறது?" என்று வியானா கேள்வி எழுப்பினார்.
 
யாரும் நேரடியாக பேசாமல் மறைமுகமாக பேசுவதாகவும், "இவங்க மேல தப்பு" என்று சொன்னால் பாத்திரங்களை டொப்பு டொப்பு என்று வைப்பதாகவும் வியானா கோபமாக குறிப்பிட்டார்.
 
"தயவுசெய்து அடுத்து தலைவராக வருபவர் சரியான சமையல் குழுவை போடுங்கள்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
இதற்குப் பதிலளித்த திவ்யா கணேஷ், வியானாவின் விமர்சனத்தை மறுக்கும் விதமாக பேசினார்.அடுத்த தடவை வியானாவை சமையல் குழுவில் போடுங்கள்" என்று திவ்யா கணேஷ் சவால் விடும் தொனியில் கூறினார்.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!