பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து, எட்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. இந்த வாரம் போட்டியில் நீடிக்க தகுதியற்றவர்கள் யார் என்பதை போட்டியாளர்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில், மொத்தம் 11 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
50-வது நாளில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபர்களை தேர்வு செய்தனர்.
நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்கள்: சான்ட்ரா, ப்ரஜின், திவ்யா கணேசன், கமருதீன், கனி திரு, எஃப்.ஜே., விக்ரம், அமித் பார்கவ், அரோரா சின்கிளேர், மற்றும் விஜே பார்வதி ஆகியோர் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த போட்டியாளர்களும் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே போட்டியில் நீடிக்க முடியும். குறைந்த வாக்குகளை பெறும் போட்டியாளர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்.
இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார், திவாகர், கெமி உள்ளிட்ட 9 பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.