Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

Advertiesment
பகவந்த் கேசரி

Bala

, திங்கள், 24 நவம்பர் 2025 (20:43 IST)
தெலுங்கில் பாலையா நடித்து வெற்றி பெற்று வசூலை அள்ளிய பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக விஜயின் ஜனநாயகன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க அனிருத் இசை அமைத்திருக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகவுள்ளது. எனவே படக்குழு புரமோஷன் வேலைகளை தொடங்கி இருக்கிறது.

 
சில நாட்களுக்கு முன்பு கூட தளபதி கச்சேரி என்கிற பெயரில் ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களை வெளியிட்டார்கள், அந்த பாடலும் யூடியூபில் சாதனை படைத்தது. இந்த படத்தின் ஆடியோ லான்ச் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீஸ் என்கிற ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. அதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
மலேசியாவில் உள்ள விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்தும் விஜய் ரசிகர்கள் அங்கு செல்லவிருக்கிறார்கள். வெறும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமில்லாமல், இசை நிகழ்ச்சியும் அங்கு நடைபெறவிருக்கிறது. இதில் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்ள இருப்பதால் அதிகமான பேர் கலந்து கொண்ட ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்கிற கின்னஸ் சாதனையை ஜனநாயகன் நிகழ்த்தப் போகிறது என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...