தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'டி.சி.' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இந்நிலையில், இந்த படத்திற்காக அவருக்கு ரூ. 35 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது ஒரு அறிமுக நடிகருக்கான மிகப் பெரிய தொகை ஆகும். எனினும், அவரது நடிப்புடன் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதை பங்களிப்புக்காகவே இந்த சம்பளம் வழங்கப்படுவதாக தெரிகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
சமூக வலைதளங்களில் இது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. பலர், லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தின் பிராண்ட் மதிப்பை வைத்து இந்த சம்பளம் கொடுக்கப்பட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ரஜினிகாந்தின் 'கூலி' படத்திற்காக தான் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியதை உறுதி செய்த லோகேஷ், அந்த பொறுப்புக்கும் உழைப்புக்கும் தான் தகுதியானவர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வாமிகா கப்பி நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.