சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான அரண்மனை 3 என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்துக்கு பெரும்பாலான விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை சிறுபிள்ளைத்தனமாக இருந்ததாக விமர்சனங்கள் வெளிவந்ததால் இந்த படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது
ஆனால் விடுமுறை நாளில் இந்த படம் வெளியானதை அடுத்து முதல் மூன்று தினங்களில் ரூபாய் 15 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாகவும் திங்கள் மற்றும் செவ்வாய் விடுமுறையிலும் மேலும் சில கோடிகளை வசூல் செய்து லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் இந்த படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு என கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதை அடுத்து இந்த படம் நல்ல லாபம் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் அரண்மனை3 வசூல் ரீதியாக லாபம் அடைந்தது என்பதால் அரண்மனை படத்தில் நான்காம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது