Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் முதலாக சிவகார்த்திகேயன் படத்தின் வாய்ப்பை பெற்ற தமன்!

முதல் முதலாக சிவகார்த்திகேயன் படத்தின் வாய்ப்பை பெற்ற தமன்!
, சனி, 16 அக்டோபர் 2021 (10:01 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் தெலுங்கில் உருவாக உள்ள படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியாவில் மட்டும் திரையரங்கின் மூலமாக 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இதையடுத்து இப்போது அமெரிக்காவில் வெளியாகி அங்கும் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதனால் அந்த படத்தின் இயக்குனர் மீது கவனம் அதிகமாக விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் தமிழ்- தெலுங்கு மொழி படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் ஆக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் வேதா படத்தில் சாம் சி எஸ்… பாலிவுட்டில் அறிமுகம்!