அரசன் படத்தில் ‘வடசென்னை’ சந்திரா… உறுதி செய்த ஆண்ட்ரியா!

vinoth
சனி, 22 நவம்பர் 2025 (08:41 IST)
சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாக்கவுள்ள ‘அரசன்’படத்தின் முன்னோட்ட வீடியோ கடந்த மாதம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாவதற்கு முதல் நாளே திரையரங்குகளிலும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இந்த முன்னோட்டக் காட்சியிலேயே ‘வடசென்னை’ உலகத்தில் சொல்லப்படாத ஒரு கதை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும் சில நேர்காணல்களில் வடசென்னை படத்தின் உலகத்தில் நடக்கும் மற்றொரு கதை எனத் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் இடம்பெறப் போகும் சர்ப்ரைஸ் காட்சிகளுக்காக ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் தான் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஆண்ட்ரியா அரசன் திரைப்படத்தில் தான் நடிக்கவுள்ளதை உறுதிபடுத்தியுள்ளார். வடசென்னை படத்தில் அவர் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் அரசன் படத்திலும் அவர் சந்திரா கதாபாத்திரத்திலேயே இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன ப்ரதீப் ரங்கநாதன் வாட ஹெவியா அடிக்குது… அபிஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டீசர் ரிலீஸ்!

மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ லான்ச்!.. வெளியான வீடியோ!...

நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது: விக்ரமுக்கு வார்னிங் கொடுத்த பிரஜின்..!

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments