Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வொர்க் அவுட் ஆனதா டார்க் ஹ்யூமர் ‘ஹெய்ஸ்ட்’ த்ரில்லர்?... ‘மாஸ்க்’ பட விமர்சனம்!

Advertiesment
வெற்றிமாறன்

vinoth

, வெள்ளி, 21 நவம்பர் 2025 (14:02 IST)
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் இன்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

முதல் பாதி முழுக்க கதையைப் பற்றிக் கவலைப்படாமல் கவின் மற்றும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரங்களை விளக்கும் காட்சிகளாக நகைச்சுவையாக(?) நகர்கின்றன. இடைவேளைக் காட்சி ஊறுகாயைக் கடித்தது போல சிறு விறுவிறுப்பைத் தந்து, இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

ஆனால் அதன் பிறகு நடக்கும் காட்சிகள் குறைசொல்லும் படி இல்லை என்றாலும் ஏற்கனவே பார்த்து சலித்துப் போன காட்சிகளாக இருப்பதால் பெரியளவில் உள்ளிழுக்கவில்லை. இரண்டாம் பாதியில் நகைச்சுவையும் பெரியளவில் வொர்க் அவுட் ஆகவில்லை. நெல்சன் ஸ்டைலில் ஒரு டார்க் காமெடிக் கதை என நினைத்து உருவாக்கி இருப்பார்கள் போல. அது பெரியளவில் எடுபடவில்லை. ஆண்ட்ரியாவின் கதாபாத்திரமும் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் கூட செயற்கையாக சீட்டில் பார்வையாளர்களை நெளியவைக்கின்றன.

அதனால் ஒரு சராசரியான படம் பார்த்த உணர்வையே ‘மாஸ்க்’ படம் கொடுத்துள்ளது. இதில் வெற்றிமாறன் வாத்தியார் வேலை பார்த்திருக்கிறார் என்று விளம்பரப்படுத்தப்பட்டதைப் பார்த்து படம் பார்க்க சென்றால் அதற்கான தடயமேக் காணவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடடே நம்ம டார்கெட் பிரதீப்பா? தேவையில்லாம தனுஷை சீண்டுறோமே? SKவின் நிலைமையை பாருங்க