என் கியூட் ஏஞ்சலுக்கு.... ஆல்யா வெளியிட்ட அழகிய வீடியோ!

திங்கள், 23 மார்ச் 2020 (16:26 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக     இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தான் ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையால் செய்த பிங்க் நிற உல்லன் தொட்டில் ஒன்றை படுத்திவிட்டு " இது என் ஏஞ்சலுக்காக" என குறிப்பிட்டுள்ளார். இந்த அழகிய வீடியோவை கண்ட ரசிகர்கள், அதில் ஏஞ்சலை காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் விரைவில் பேபியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் என கூறி வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

such a cute handmade one for my cute angel @ajs.croche

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அந்த நடிகர் வீட்டில் வெளிநாட்டு பெண் இருக்கிறார்… அவருக்குக் கொரோனா இருக்குமா ? சர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீரெட்டி !