ஆல்யாவுக்கு குழந்தை பொறந்தாச்சு... அப்பாவான சஞ்சீவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!

சனி, 21 மார்ச் 2020 (10:30 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக  இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து தாய்மையடைந்த ஆல்யாவிற்கு சீமந்தம் நடத்தி அழகு பார்த்தார் சஞ்சீவ். மேலும், கடந்த சில நாட்களாகவே தனக்கு பிறக்கப்போகும் குழந்தை குறித்து கியூட்டான சில அப்டேட்டுகளை கொடுத்து வந்த ஆல்யா தன் குழந்தைக்கு தேவையான மெத்தை, தலையணை, உடை போன்ற பொருட்களை எல்லாம் வாங்கி அதில் பெண் குழந்தைக்கு உடுத்தும் கௌன் ஒன்றை பதிவிட்டு பிறக்கப்போவது பெண் குழந்தை தான் என்பதை சிம்பாலிக்காக கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என மிகுந்த மகிழ்ச்சியுடன் சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். நண்பர்கள், ரசிகர்கள் என வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy to announce tat we are blessed with a girl baby

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நமீதா என்னம்மா டிரஸ் இது...? செம ஹாட் அழகால் பேச்சு மூச்சின்றி போன ரசிகர்கள்!