Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆல்யாவிற்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த விஜய் டிவி - வைரலாகும் வீடியோ !

Advertiesment
alya manasa
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:03 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். 
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். 
 
தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. விஜய் தொலைக்காட்சியில் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்ற அந்த விழா மேடையில் தான் முதன்முறையாக நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக  இருப்பதாக அறிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை அழைத்து ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் தற்போது பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்துகொண்ட ஆல்யாவுடன் பேசாமல் இருந்த அவரது பெற்றோரை அழைத்து விஜய் தொலைக்காட்சி வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளது. இதில் டி டி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று ஆசீர்வதித்துள்ளனர். 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இடையேயான பிரச்சனை... உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!