அஜித்தின் கால்ஷீட் கிடைக்காதா? என பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் சம்பள விஷயத்தில் எங்கள் நிலையில் இருந்து நாங்கள் இறங்கவே மாட்டோம் என ஏஜிஎஸ் நிறுவனம் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆதிக்கும் அஜித்தும் அடுத்து ஒரு படத்தில் மீண்டும் இணைய போகிறார்கள். குட் பேட் அக்லி படத்தின் மிகப்பெரிய வெற்றி மீண்டும் இவர்கள் இணைய காரணமாக அமைந்தது.
ரசிகர்களும் இந்த கூட்டணியை மறுபடியும் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் குட் பேட் அக்லி திரைப்படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான திரைப்படமாக அமைந்திருந்தது. ஒரு ஃபுல் என்டர்டெயின்மென்ட் திரைப்படமாகவும் இருந்தது. அதனால் மறுபடியும் இவர்கள் கூட்டணியை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
அந்த வகையில் அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க இருக்கிறார். தற்போது இந்த படம் தயாரிப்பாளர்கள் தேடும் படலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து அவர்கள் விலகினார்கள்.
எத்தனையோ தயாரிப்பாளர்களை கேட்டும் அஜித் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில்தான் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சென்றிருக்கிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனத்தை பொருத்தவரைக்கும் எந்த நடிகராக இருந்தாலும் முதலில் கணக்கு போட்டு பார்த்த பிறகு நடிகர்களுக்கான சம்பளத்தை ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்யும். அந்த வகையில் இந்த படத்திற்கும் பட்ஜெட் போட்டு பார்த்த பிறகு அஜித்திற்கு 80 கோடி என்று ஏஜிஎஸ் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அஜித் தன்னுடைய சம்பளத்தை 185 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.அதனால் இது பேச்சுவார்த்தையோடு நின்றிருக்கிறது.