கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா தற்போது பேன் இந்தியா நடிகையாக உயர்ந்து கலக்கி வருகிறார். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.
தற்போது அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் இன்று இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக ராஷ்மிகா இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்நிலையில் தன்னுடைய இந்த புகழைப் பயன்படுத்தி அவர் இப்போது வாசனை திரவிய தயாரிப்பு துறையில் கால்பதித்துள்ளார். இந்த துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள பிசிஏ குழுமத்துடன் அவர் டியர் டைரி என்ற வாசனை திரவிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் மூன்று திரவியங்களாக நேஷனல் க்ரஷ், இர்ரிப்ளேஸபிள் மற்றும் காண்ட்ரவர்சியல் ஆகிய 3 வகையான வாசனை திரவியங்கள் வெளிவரவுள்ளன.