Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நன்றி கார்ட் போட்டதற்கும் பணம் கேட்கிறார்… இளையராஜா மீது வனிதா ஆவேசம்!

Advertiesment
வனிதா விஜயகுமார்

vinoth

, வியாழன், 24 ஜூலை 2025 (08:09 IST)
பிரபல நடிகையும் விஜயகுமாரின் மகளுமான வனிதா விஜயகுமார் நடித்து இயக்கியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் வனிதா, அவரின் முன்னாள் கணவர் ராபர்ட், கிரண் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வெளியாகி விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றது.

இந்நிலையில் இந்த டிரைலரில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இளையராஜா இசையில் உருவாக்கப்பட்ட ‘சிவராத்திரி’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. தன்னிடம் அனுமதிப் பெறாமல் அந்த பாடலை பயன்படுத்தியுள்ளதாக வனிதா மேல் தற்போது இளையராஜா தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று இளையராஜா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து வனிதா தரப்பில் அந்த பாடலை சோனி ம்யூசிக் நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்றுதான் பயன்படுத்தினோம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்குக் குறித்து பேசியுள்ள வனிதா “சிவராத்திரி பாடலுக்கு சோனி நிறுவனத்திடம் பணம் கட்டி அனுமதி பெற்றுதான் பயன்படுத்தினோம். மேலும் ‘டைட்டில் கார்டில்’ இளையராஜா சாருக்கு நன்றி தெரிவித்துள்ளோம். ஆனால் தனது பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் தேடுவதாக அதற்கும் பணம் கேட்கிறார். நன்றி சொன்ன பிறகும் பணம் கேட்பது தவறு” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தாமதமா? வழக்கம் போல் வதந்தி கிளப்பும் யூடியூபர்கள்..!