அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான பரிசு

வியாழன், 26 மார்ச் 2020 (08:30 IST)
பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான பரிசு
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இரவு பகலாக கொரோனா வைரசுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், தினமும் அவர் மருத்துவமனைகளை சோதனை செய்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்து வருகிறார் 
 
அதுமட்டுமின்றி அவ்வப்போது சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனை செய்து கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த அதிரடி நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர்களும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். அப்போது அவர் அமைச்சருக்கு மலர்க்கொத்து கொடுப்பதற்கு பதிலாக 5 லிட்டர் சானிடைசர் கேன் ஒன்றை சுகாதார அமைச்சருக்கு பரிசாக கொடுத்துள்ளார். எதையுமே வித்தியாசமாக செய்யும் நடிகர் பார்த்திபன் இந்த விஷயத்திலும் வித்தியாசமான பரிசு கொடுத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது

சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” pic.twitter.com/mtp2x3GLTD

— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 25, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வடிவேலுவை மீண்டும் நடிக்க சொன்னார் விஜயகாந்த் – நடிகர் பரபரப்பு தகவல் !