தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு தலை முறையிலும் இரு உச்ச நட்சத்திரங்கள் இருப்பார்கள். இந்த வகையில் 60, 70கள் காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி என இரு பெரும் ஆளுமைகள் தமிழ் சினிமாவை ஆண்டு வந்தார்கள். அவர்களுக்கு அடுத்த படியாக 80 களுக்கு பிறகு ரஜினி, கமல் என இரு பெரும் துருவங்களாக இன்று வரை தமிழ் சினிமாவின் பெருமைகளாக இருந்து வருகிறார்கள்.
ரஜினி கமலுக்கு பிறகு அதே பெருமைகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கக்கூடியவர்கள் விஜயும் அஜித்தும். இருவருமே ஒரே காலகட்டத்தில் தான் சினிமாவில் நுழைந்தார்கள். ஆனால் அஜித்துக்கு முன்பே விஜய் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஹீரோக்களாக இருவருமே ஒரே காலகட்டத்தில் தான் அறிமுகமானார்கள். இன்றைய தலைமுறைகளின் ஆதர்ச நாயகர்களாகவும் இருவரும் உருவெடுத்திருக்கிறார்கள்.
1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். 1993 ஆம் ஆண்டு அமராவதி திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார் அஜித். இருவரும் சேர்ந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் தான் முதன் முதலில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜயின் நண்பராக அஜித் நடித்திருப்பார். அதிலிருந்து தொடர்ந்தது தான் இவர்களுடைய நட்பு. இன்று வரை அது அப்படியே தொடர்ந்து வருகிறது.
அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்துக்காக விஜயின் தாய் சோபா அஜித்துக்கும் சேர்த்தே சமைத்து கொடுப்பாராம். அந்த காலகட்டத்தில் விஜயும் அஜித்தும் குடும்ப நண்பர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். அப்படித்தான் இருவருடைய நட்பு ஆரம்பித்து இருக்கிறது. அவ்வப்பொழுது இருவரும் சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துக் கொள்வது தொலைபேசியில் பேசிக் கொள்வது என தங்களுடைய நட்பை தொடர்ந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித்தையும் விஜயையும் பற்றி பிரபல நடிகர் ஒருவர் கடுமையாக விமர்சித்து பேசிய ஒரு செய்தி தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. அவர் வேறு யாருமில்லை. காமெடி நடிகர் ஜெயமணி. அவர் கூறியது என்னவெனில், எம்ஜிஆருக்கு அப்புறம் அரசியலில் எந்த நடிகர்களும் வர முடியல. அவர் மக்களோட மக்களாக இருந்தார்.
அவருக்கு அப்புறம் கேப்டன் சினிமா நடிகர்களுக்கு அவ்வளவு செய்து இருக்கிறார். ஆனால் இப்ப இருக்கிற விஜய் ஆகட்டும் அஜித் ஆகட்டும். கேரியர கேரவன்ல கொண்டு போய் தின்னுட்டு எவன் எப்படி போனா என்னனு இருக்காங்க. முதல்ல சினிமாவுல இருக்குறவங்கள ஒழுங்கா பாத்துக்க, அப்பதானே மக்கள் நம்புவான் என இருவரையும் கண்டபடி பேசி இருக்கிறார்.