கேரளத்தில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற முன்னணி நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்திற்காக எர்ணாகுளம் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திலீப், கைது செய்யப்பட்டு 85 நாள்கள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 8 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இன்று வெளியான தீர்ப்பில், நடிகையின் கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளரான பல்சர் சுனில் , மார்டின் ஆண்டனி உள்ளிட்ட மொத்தம் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த 6 பேருக்குமான தண்டனை விவரங்கள் இன்று மதியம் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு கேரளத் திரையுலகிலும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.