இந்தியத் தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசை கண்டித்து இந்தியா கேட் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டத்தின்போது, வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் சிலர் சாலையைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் மீதும், காவல்துறையினர் மீதும் 'பெப்பர் ஸ்பிரே' கொண்டு தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குக்கூட வழிவிட மறுத்து, போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெப்பர் ஸ்பிரே தாக்குதலில் காயமடைந்த சில காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் காற்று மாசின் அளவு "மிகவும் மோசம்" என்ற பிரிவில் உள்ள நிலையில், இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.