இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள சிந்து மாகாணம் எதிர்காலத்தில் மீண்டும் இந்தியாவுடன் இணையக்கூடும் என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற சிந்து சமூக மாநாடு ஒன்றில் பேசிய அவர், "சிந்து நிலப்பரப்பு தற்போது இந்தியாவின் அங்கமாக இல்லாவிட்டாலும், நாகரிக மற்றும் கலாசார ரீதியாக அது எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே உள்ளது. நிலப்பரப்பின் எல்லைகள் மாறக்கூடியவை; இவை நிரந்தரமில்லை. சிந்து பகுதி நாளை மீண்டும் இந்தியாவுக்கு திரும்பக்கூடும் என்று யாருக்குத் தெரியும்?"
சிந்து மாகாணம், சிந்து நாகரிகத்தின் பிறப்பிடமாகவும் சிந்தி சமூகத்தின் பூர்வீக இடமாகவும் கருதப்படுகிறது. அண்மையில், ஜம்மு - காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவும் சூழலில் ராஜ்நாத் சிங் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.