டாடா மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் நவம்பர் 27 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ளது. மொத்தம் 73 இடங்களுக்கு 277 வீராங்கனைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப் பட்டியலில் 194 இந்திய வீராங்கனைகள் , 50 இடங்களுக்காக போட்டியிடுகின்றனர். வெளிநாட்டு வீராங்கனைகள் 23 இடங்களுக்காக போட்டியிடுகின்றனர்.
உச்சபட்ச அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் பிரிவில் 19 வீராங்கனைகளும், ரூ.40 லட்சம் பிரிவில் 11 வீராங்கனைகளும் உள்ளனர். தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைன் உள்ளிட்ட 8 உலக தர நட்சத்திரங்களுடன் ஏலம் தொடங்குகிறது.
WPL இளம் இந்திய வீராங்கனைகளுக்கு உலக நட்சத்திரங்களுடன் பயிற்சி பெறவும், நிதி பாதுகாப்பு பெறவும், திறன் கூர்மைப்படுத்தவும் ஒரு மாற்றத்திற்கான தளமாக மாறியுள்ளது. இந்த ஏலம், மகளிர் கிரிக்கெட் உலகின் அடுத்த பாய்ச்சலை குறிக்கிறது.