Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் மாற்றப்படுகிறதா? முதல்வர் சித்தராமையா தீவிர ஆலோசனை..!

Advertiesment
Chinnasamy

Siva

, திங்கள், 9 ஜூன் 2025 (08:16 IST)
பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய நிலையில், அது குறித்த கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது கர்நாடக மாநில அரசுக்கு பெரும் அவப்பெயரை தேடி தந்த நிலையில், இது குறித்து தீவிர நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகிறார்கள் என்றும், ஒரு சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்த நிலையில், பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் நகரின் மத்தியில் இருப்பதால், இந்த மைதானத்தை மாற்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு முன் தகுதியான ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னர் மைதானத்தை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
பெங்களூர் நகருக்கு வெளியே மைதானத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும், தற்போது இருக்கும் ஸ்டேடியம் அரசு கட்டிடங்களாக மாற்றப்படும் என்றும் பெங்களூர் அரசு அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்றும், அதுவரை சின்னசாமி ஸ்டேடியத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!