பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிக்கு பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்துச் சம்பவம் தொடர்பாக விராட் கோலியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி கைப்பற்றியது. இந்த வரலாற்றுச் சாதனையை கொண்டாட, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்ததும், 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், இந்நிகழ்வை ஏற்பாடு செய்த கர்நாடகா கிரிக்கெட் சங்கம், ஆர்சிபி நிர்வாகம் மற்றும் மற்ற பொறுப்பாளர்களிடம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
தற்போது, சமூக ஆர்வலர் ஹெச்.எம். வெங்கடேஷ், விராட் கோலியும் இந்த நெரிசலுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் என கூறி, அவர் மீது புகார் அளித்துள்ளார். கூட்டம் பெரிதாக திரள்வதற்கு காரணமாக கோலியின் சமூக ஊடகப்பதிவுகள் விளங்கியுள்ளதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கோலி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டு 14 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கோலி தற்போது லண்டனில் இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இப்புகார் வழியாக அவரும் கைது செய்யப்படுவாரா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி ஆகும்.