Publish Date: Fri, 06 Jun 2025 (17:04 IST)
Updated Date: Fri, 06 Jun 2025 (17:06 IST)
இந்திய அணிக்காக மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் விக்கெட் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் எனும் பெருமைக்குரியவர் பியுஷ் சாவ்லா. ஆனால் இந்திய அணியில் அவருக்கு மிகெப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கவனம் ஈர்த்தார். பஞ்சாப், கொல்கத்தா மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகளுக்காக விளையாடிய இவர் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவர்.
இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் 192 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.கடந்த சில சீசன்களாக அவர் எந்த அணியாலும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சாவ்லா அறிவித்துள்ளார்.
36 வயதாகும் அவர் இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 25 ஒருநாள் போட்டிகள் மற்று 7 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.