இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கொடுத்த இமாலய இலக்கை கடைசி ஓவரில் எட்டி தென்னாப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர்களின் அபார சதம் காரணமாக 358 ரன்கள் எடுத்தது.
இதனை எடுத்து 359 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாபிரிக்க அணி, 49.2 ஓவர்களில் 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் அபாரமாக விளையாடி 110 ரன்கள் அடித்தார்.
கடைசி நேரத்தில் ப்ரீட்ஸ் 34 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார் என்பதும், இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.