இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 358 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.
இந்திய அணியில் விராட் கோலி 102 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்களும் எடுத்து சதம் அடித்தனர். கேப்டன் கே.எல். ராகுல் அதிரடியாக 66 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில், 359 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி தற்போது தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குவின்டன் டி காக் 8 ரன்களில் அவுட் ஆன நிலையில், மார்க்ரம் மற்றும் கேப்டன் பவுமா ஆகிய இருவரும் தற்போது களத்தில் உள்ளனர்.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றும் பெருமையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.