Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

Advertiesment
விராட் கோலி

Mahendran

, புதன், 3 டிசம்பர் 2025 (15:16 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
 
தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு,  விராட் கோலியுடன் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தார். இருவரும் தங்களது அரை சதத்தை நெருங்கி வருகின்றனர். 23 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது.
 
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்களான நன்றே பர்கர் மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியில் இந்த ஆட்டத்திற்காக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
 
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருடன் லுங்கி இங்கிடி மற்றும் கேசவ் மகாராஜ் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!