இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக சதம் அடித்த நிலையில், விராட் கோலி 95 ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கி உள்ளார்.
முன்னதாக, தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 22 ரன்களுடனும், ரோஹித் சர்மா 14 ரன்களுடனும் அவுட் ஆகிய நிலையில், விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி மிக அபாரமாக விளையாடி வருகிறது.
சற்றுமுன் வரை இந்திய அணி 35 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.