Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Advertiesment
Vaibhav Suryavanshi

Siva

, செவ்வாய், 2 டிசம்பர் 2025 (16:29 IST)
பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மகாராஷ்டிராவுக்கு எதிராக நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில், அதிரடியாக சதம் அடித்து சாதனை படைத்தார்.
 
இந்த போட்டியில் 34 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அடுத்த 24 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இது அவரது மூன்றாவது டி20 சதம் ஆகும். 14 வயதில், மூன்று டி20 சதங்களை பதிவு செய்த உலகின் முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மேலும், 14 ஆண்டுகள் மற்றும் 250 நாட்களில் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சதம் அடித்த இளம் வீரர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
 
முன்னதாக, அவர் ஐபிஎல் மற்றும் இந்தியா A அணிக்காகவும் சதம் அடித்துள்ளார். அவர் விளாசிய 100 ரன்களுக்கு மேல் ரன் குவிப்பு, பீகார் அணியை 176 என்ற வலுவான இலக்கை எட்ட வைத்தது. இருப்பினும், பிரித்வி ஷாவின் அதிரடி ஆட்டத்தால் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியுடன், பீகார் அணி நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகளை இழந்துள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?