ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

Mahendran
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (18:30 IST)
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சமநிலை கண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அடுத்து ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலியா செல்கிறது. நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
 
இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று, அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கிளென் மெக்ராத் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 
 
அவர் இது குறித்துப் பேசியபோது, "எங்கள் அணியின் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் சொந்த மண்ணில் சிறப்பாகச் செயல்படும்போது, அது இங்கிலாந்து அணிக்கு மிகவும் சவாலாக இருக்கும். 
 
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை வென்றதில்லை என்ற புள்ளிவிவரமும் உள்ளது. எனவே, அவர்களால் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற முடியுமா என்று பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்" என்றார்.
 
இங்கிலாந்து அணி கடைசியாக 2010-2011-ஆம் ஆண்டில் ஆஷஸ் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments