இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.
தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விவசாயம், பைக் சவாரி என மத்திய வயது வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தன்னுடைய 43 ஆவது வயதிலும் ஆடிவரும் தோனி, இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தோனி “சிஎஸ்கே அணியுடன் என் பயணம் இன்னும் 15 ஆண்டுகள் தொடரும். அதற்காக அவர்கள் நான் இன்னும் 15 ஆண்டுகள் விளையாடுவேன் என நம்பிவிடக் கூடாது. நான் எப்போது மஞ்சள் நிற ஜெர்ஸி அணிந்து சென்னைக்கு ஆதரவாக அமர்ந்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.