ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பைத் தொடரை சமனில் முடித்து திரும்பிய இந்திய அணி அடுத்த செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது. இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளது செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் நிறைய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. மீண்டும் ஷுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுவார்கள் என சொல்லப்படுகிறது. அதே போல ஸ்ரேயாஸ் ஐயரையும் மீண்டும் டி 20 அணிக்குள் திரும்பவரவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல அடுத்து இந்தியா விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இடம்பெறவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.