தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

Siva
ஞாயிறு, 23 நவம்பர் 2025 (18:11 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
இந்திய அணியின் வழக்கமான கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலியால் விலகியதையடுத்து, கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார்.
 
துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்க 'ஏ' அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. முகமது சிராஜ் மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய அணி விவரம்: ரோஹித், ஜெய்ஸ்வால், விராத் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் , ரிஷப் பந்த் (துணைக் கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், மற்றும் துருவ் ஜுரெல்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments