Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்: பரபரப்பு தகவல்கள்

Advertiesment
சச்சின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்: பரபரப்பு தகவல்கள்
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (08:01 IST)
சச்சின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்
நேற்றைய பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சச்சின் சாதனையை பஞ்சாபின் கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார் 
 
ஐபிஎல் போட்டிகளில் மிக வேகமாக 2000 ரன்கள் எடுத்து சாதனை செய்தவர் சச்சின் தெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை நேற்று கேஎல் ராகுல் முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் 63 இன்னிங்சில் 2000 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் 60 இன்னிங்சில் 2000 ரன்கள் எடுத்து சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒரு சதத்திற்கு மேல் எடுத்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். கே.எல். ராகுல் நடிக்கும் இரண்டாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் பெங்களூர் அணியை இதற்கு முன்னர் பஞ்சாப் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வென்று இருந்தது. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றதால் இரண்டாவது அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் வெற்றியை அந்த அணி நேற்றைய போட்டியில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 132 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IPL- 2020;கோலியின் பெங்களூரு அணி படுதோல்வி... 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி !