Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேப்டன் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்... சொல்கிறார் பிரேமலதா!

Advertiesment
கேப்டன் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்... சொல்கிறார் பிரேமலதா!
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (17:38 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் என பிரேமலதா விஜயகாந்த் தகவல். 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததாகவும் ஆனால் அது சரியாகிவிட்டதாகவும் விஜயகாந்த் தற்போது உடல்நலத்துடன் இருப்பதாகவும் அறிக்கை வெளியானது. 
 
இதனைத்தொடர்ந்து விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து பேசியுள்ளார். 
 
அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். சிறு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். வீட்டில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெளிவுப்படுத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகக்கவசம் அணியமாட்டேன் எனக் கூறிய அமைச்சர்… எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து பல்டி!