Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

Advertiesment
Cricket

vinoth

, வெள்ளி, 25 ஜூலை 2025 (11:11 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் நாடு தாண்டியும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதற்குக் காரணம் அவரின் வித்தியாசமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான். அவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

அதன் பின்னர் தன்னுடைய ஏற்பட்ட பார்வை குறைபாடு காரணமாக வெகு விரைவாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் தன்னுடைய சமூகவலைதள சேனல் மூலமாக  கிரிக்கெட் குறித்து தொடர்ந்து தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் 51 பந்துகளில்116 ரன்கள் சேர்த்து துவம்சம் செய்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அவர் 15 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணி நிர்ணயித்த 153 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி 13 ஆவது ஓவரிலேயே எட்டியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!