இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணி 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன் பின்னர் தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் , அதன் பின்னர் விக்கெட்களை மளமளவென இழந்தது.
இதனால் அந்த அணி 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது. தற்போது 74 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து ஆடிவருகிறது. இந்த போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் சிராஜ் சர்வதேசப் போட்டிகளில் 200 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் சிராஜ் இந்த தொடரில் சுமார் 157 ஓவர்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இது மற்ற பவுலர்களை விட அதிகம். அதே போல கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரிலும் அவர் 155 ஓவர்கள் வீசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து காயம் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லாமல் பந்துவீசி அசத்தி வருகிறார். இதன் மூலம் இந்திய அணியின் பவுலிங் மெஷினாக உருவாகியுள்ளார்.