தற்கால டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் விளங்குபவர் ஜோ ரூட். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் தற்போது ஓவலில் நடந்து வரும் போட்டியில் அவர் சச்சினின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். நேற்றைய இன்னிங்ஸில் அவர் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸின் மூலம் அவர் இங்கிலாந்து மண்ணில் 7220 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் தாய் மண்ணில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சச்சின் 7216 ரன்களை இந்திய மண்ணில் சேர்த்திருந்தார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் ஆஸ்திரேலிய மண்ணில் 7578 ரன்கள் சேர்த்துள்ளார்.