2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

Mahendran
சனி, 22 நவம்பர் 2025 (09:52 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, முதல் நாளே 19 விக்கெட்டுகள் விழுந்ததால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரண்டாவது நாளில் மேலும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்துவிட்ட நிலையில், இந்த டெஸ்ட் போட்டி இன்று அல்லது நாளைக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு ஆஸ்திரேலிய அணி களமிறங்கி, 132 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் ஏழு விக்கெட்டுகளை எடுத்தார் என்றால், இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. இதே வேகத்தில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தால், இன்று அல்லது நாளைக்குள் இந்த போட்டி முடிவடைந்துவிடும் என்று வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments