கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

vinoth
சனி, 22 நவம்பர் 2025 (09:27 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே  கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி பள்ளி சிறுவர்களின் போட்டி போல முடிந்தது. இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களுக்கு மேல் எட்டப்படவில்லை. தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்த 120 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.

இதையடுத்து இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌகாத்தியில் இன்று தொடங்கியுள்ளது. காயம் காரணமாக ஷுப்மன் கில் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடததால் ரிஷப் பண்ட் அணியை வழிநடத்துகிறார். சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்திய அணி
கே எல் ராகுல், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், ரவீந்தர ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, மொகமது சிராஜ்

தென்னாப்பிரிகா அணி
எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா, டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரெய்னி, மார்க்கோ யான்ஸன், செனுரன் முத்துசாமி, சைமன் ஹார்மர், கேஷவ் மகாராஜ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments