Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்! | January 2025 Monthly Horoscope Magaram

Magaram

Prasanth Karthick

, செவ்வாய், 31 டிசம்பர் 2024 (15:06 IST)
January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.


 
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சனி -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் ராஹூ  - பஞசம  ஸ்தானத்தில் குரு (வ) -  களத்திர  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) -  பாக்கிய ஸ்தானத்தில் கேது -  லாப  ஸ்தானத்தில் புதன் -  அயன சயன போக  ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 

01.01.2025  அன்று  புதன்  லாப  ஸ்தானத்தில்  இருந்து  அயன  சயன  போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
14.01.2025   அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்   ராசிக்கு  மாறுகிறார்.
18.01.2025 அன்று களத்திர  ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 28.01.2025 அன்று தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் குடும்ப நிலைகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்தபடி பணம் மட்டும் கைக்கு வந்து செல்லும். ஆனால் சேமிப்பதற்கு முயற்சி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். தொழில்ஸ்தானத்தையும் தனஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி செல்வீர்கள். பேசப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும். பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர்.

பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல் புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர். உங்களது நேர்மையான முன்னேற்றம் எந்த தடங்கல்கள் வந்தாலும் சாதிப்பீர்கள். உங்களது தெய்வ பலம் அத்தனை எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். பூமி சம்பந்தப்பட்ட பிரச்ச்னைகள் முடிந்து ஓரளவு நன்மைகள் நடக்கும். நிலம், மனை சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும். பெண்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.

உத்திராடம்:

இந்த மாதம் பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.

திருவோணம்:

இந்த மாதம் கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சனை தீரும்.

அவிட்டம்:

இந்த மாதம் ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செயல்படுவது நல்லது. பணவரவு ஏற்படும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள்  வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.
சந்திராஷ்டம தினங்கள்:      17, 18
அதிர்ஷ்ட தினங்கள்:            1, 27, 28

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – தனுசு! | January 2025 Monthly Horoscope Dhanusu