Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ஆண்டின் கடைசி நாள் எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள்(31.12.2024)!

astro

Prasanth Karthick

, செவ்வாய், 31 டிசம்பர் 2024 (05:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

 


மேஷம்:
இன்று திட்டமிட்டு காரியங்களை செய்வீர்கள். தயக்க குணத்தை விடுவது வெற்றிக்கு உதவும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

ரிஷபம்:
இன்று தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

 
மிதுனம்:
இன்று குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்:
இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

சிம்மம்:
இன்று புதிய இடங்களில் திறமையை வெளிப்படுத்தும் போது கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. எனவே அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கன்னி:
இன்று தொழில் வியாபாரத்தில் ஒரு சில சிக்கலான கட்டங்களை சந்திக்க நேரிடும். ஆனால் முடிவில் எதிர்பார்த்தபடி சாதகமான பலன் கிடைக்கும். கூடுதலான லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலும், மன சோர்வும் அடைய நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

துலாம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் செலவு, சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம். கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

விருச்சிகம்:
இன்று எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மற்றவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

தனுசு:
இன்று கடின உழைப்பும் நேர்மையான போக்கும் காணப்படும். செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மன தெளிவு உண்டாகும். திடீர் இடமாற்றம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதாவது குறை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்படுவார்கள். நிர்வாகத்தினரின் ஆதரவும் கிடைக்க பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்:
இன்று குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். தாய், தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளை மதித்து நடப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

மீனம்:
இன்று எந்த சூழ்நிலையிலும் நிதானமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்கள் கல்வி தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | January 2025 Monthly Horoscope viruchigam