January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:
01.01.2025 அன்று புதன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
14.01.2025 அன்று ராசியில் இருந்து சூர்யன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18.01.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28.01.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும்.
சொன்ன சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். உத்தியோகத்தினருக்கு அலுவலகத்தில் கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும். இருக்கும் பணியில் நினைத்தபடி இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும். கூட்டு வியாபாரம் செய்பவர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர்.
மூலம்:
இந்த மாதம் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பூராடம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்.
உத்திராடம்:
இந்த மாதம் குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும்.
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள். அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26