January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞசம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:
01.01.2025 அன்று புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.01.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூர்யன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18.01.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28.01.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் காலகட்டமிது. சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குரு பகவானின் அருட் பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும்.
திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது. அரசியல்துறையினருக்கு வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். மாணவகண்மணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும்.
சித்திரை:
இந்த மாதம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அனைவரிடமும் அனுசரித்து செல்வீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
ஸ்வாதி:
இந்த மாதம் அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும்.
விசாகம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: நவக்ரஹ சன்னிதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21