Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | January 2025 Monthly Horoscope viruchigam

Virichigam

Prasanth Karthick

, திங்கள், 30 டிசம்பர் 2024 (18:10 IST)
January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.


 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:


ராசியில்  புதன் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன் -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் சுக்ரன் -  சுக  ஸ்தானத்தில் சனி -  பஞசம  ஸ்தானத்தில் ராஹூ  - களத்திர  ஸ்தானத்தில் குரு (வ) -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) -  லாப  ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 

01.01.2025  அன்று  புதன்  ராசியில்  இருந்து  தன  வாக்கு  குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

14.01.2025   அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

18.01.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 28.01.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது. மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. பொருட்கள் திருட்டு போகலாம். ஜாக்கிரதை. ஞாபக சக்தியை இழக்காமல் இருபதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

விசாகம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர்  புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை  உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அனுஷம்:

இந்த மாதம் தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

கேட்டை:

இந்த மாதம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

பரிகாரம்: முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:      12, 13
அதிர்ஷ்ட தினங்கள்:            22, 23

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | January 2025 Monthly Horoscope Thulam