Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கும்பம்! | January 2025 Monthly Horoscope Kumbam

Prasanth Karthick
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (16:08 IST)
January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
 



கிரகநிலை:

ராசியில்  சனி -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் ராஹூ - சுக  ஸ்தானத்தில் குரு (வ) -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) -  அஷ்டம  ஸ்தானத்தில் கேது -  தொழில்  ஸ்தானத்தில் புதன் -  லாப  ஸ்தானத்தில் சூர்யன் -  அயன சயன போக  ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 

01.01.2025  அன்று  புதன்  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
14.01.2025   அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
18.01.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 28.01.2025 அன்று ராசியில் இருந்து சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். தந்தை வழி மூலம் அனுகூலம் கிடைக்கும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும்.

சேமிப்பு உயரும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

அவிட்டம்:

இந்த மாதம் சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும்.  மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

சதயம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பூரட்டாதி:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனகசப்பு மாறும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:      19, 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்:            29, 30, 2, 3

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments